ADDED : மார் 28, 2025 05:51 AM
போடி; போடி அருகே மேலப்பரவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி 42. சாமக்குளம் முனீஸ்வரன் கோயில் அருகே தோட்டம் உள்ளது. இவருக்கும் போடியை சேர்ந்த பிரகாஷூக்கும் இத்தோட்டம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் போடியை சேர்ந்த சின்னச்சாமி, முனியாண்டி இருவரும் செல்வ கணபதியின் தோட்டத்தை குத்தகைக்கு பார்க்க சென்றுள்ளனர். அப்போது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த பிரகாஷ், பழனிச்சாமி, பிரகதீஸ் ஆகியோர் சேர்ந்து சின்னச்சாமி, முனியாண்டியை குச்சியால் தாக்கி, காயம் ஏற்படுத்தி, அரிவாளால் வெட்ட முயன்றதோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
செல்வகணபதி புகாரில் குரங்கணி போலீசார் பிரகாஷ், பழனிச்சாமி, பிரகதீஷ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.