/உள்ளூர் செய்திகள்/தேனி/கதிர்நரசிங்கபுரத்தில் சேதம் அடைந்து வரும் பாலம்கதிர்நரசிங்கபுரத்தில் சேதம் அடைந்து வரும் பாலம்
கதிர்நரசிங்கபுரத்தில் சேதம் அடைந்து வரும் பாலம்
கதிர்நரசிங்கபுரத்தில் சேதம் அடைந்து வரும் பாலம்
கதிர்நரசிங்கபுரத்தில் சேதம் அடைந்து வரும் பாலம்
ADDED : பிப் 11, 2024 01:36 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி - வேலப்பர் கோயில் ரோட்டில் கதிர்நரசிங்கபுரம் அருகே நாகலாறு ஓடையில் உள்ள பழைய பாலத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. ரோடு விரிவாக்கத்தின் போது இதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டப்பட்டது. தற்போது பழைய பாலமும் பயன்பாட்டில் உள்ளது. பழைய பாலத்தின் கான்கிரீட் தடுப்புகள் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படியாக உள்ளன. சேதத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிறது. சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.