/உள்ளூர் செய்திகள்/தேனி/கிரிக்கெட்: பெரியகுளம் அரசு பள்ளி சாம்பியன்கிரிக்கெட்: பெரியகுளம் அரசு பள்ளி சாம்பியன்
கிரிக்கெட்: பெரியகுளம் அரசு பள்ளி சாம்பியன்
கிரிக்கெட்: பெரியகுளம் அரசு பள்ளி சாம்பியன்
கிரிக்கெட்: பெரியகுளம் அரசு பள்ளி சாம்பியன்
ADDED : ஜன 05, 2024 05:12 AM

--தேவதானப்பட்டி : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
மேரி மாதா கலைக் கல்லூரியில் நிறுவனர் 7-வது 'புனித குரியகோஸ் எலியாஸ் சாவரா' நினைவு மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 16 அரசு மேல்நிலைப்பள்ளிகள்,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
நாக்-ஆவுட், லீக் சுற்று போட்டிகளாக நடந்தது. முதலிடத்தை பிடிப்பதற்கு பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் மோதியது. இதில் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி பிடித்தது.
பரிசளிப்பு விழா: கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜோஷி பரம் தொட், நிதி நிர்வாக மேலாளர் பிஜோய் மங்களத்து, பேராசிரியர் சோனி முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் சில்வர் ஜூபிலி விளையாட்டு கழக செயலாளர் சிதம்பர சூரியவேலு உள்பட பலர் பங்கேற்றார். முதலிடம் பிடித்த பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ரூ.5 ஆயிரம், கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3 ஆயிரம், கோப்பையும், பிற அணிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளை கல்லூரி விளையாட்டு துறை நிர்வாகம் செய்திருந்தனர்.