/உள்ளூர் செய்திகள்/தேனி/சின்னமனுார் அருகே ரூ.40 கோடியில் உறைகிணறு அமைக்கும் பணிகள் துவக்கம்: 'சிப்காட்' தண்ணீர் தேவை பூர்த்தியாக நடவடிக்கைசின்னமனுார் அருகே ரூ.40 கோடியில் உறைகிணறு அமைக்கும் பணிகள் துவக்கம்: 'சிப்காட்' தண்ணீர் தேவை பூர்த்தியாக நடவடிக்கை
சின்னமனுார் அருகே ரூ.40 கோடியில் உறைகிணறு அமைக்கும் பணிகள் துவக்கம்: 'சிப்காட்' தண்ணீர் தேவை பூர்த்தியாக நடவடிக்கை
சின்னமனுார் அருகே ரூ.40 கோடியில் உறைகிணறு அமைக்கும் பணிகள் துவக்கம்: 'சிப்காட்' தண்ணீர் தேவை பூர்த்தியாக நடவடிக்கை
சின்னமனுார் அருகே ரூ.40 கோடியில் உறைகிணறு அமைக்கும் பணிகள் துவக்கம்: 'சிப்காட்' தண்ணீர் தேவை பூர்த்தியாக நடவடிக்கை
ADDED : ஜூன் 24, 2024 02:07 AM
சின்னமனுார் : தப்புக்குண்டு கிராமத்தில் அமையும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு தேவைப்படும் தண்ணீர், சின்னமனுார் அருகே முல்லைப் பெரியாற்றில் இருந்து பம்பிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
கோட்டூருக்கு அருகில் உள்ள தப்புக்குண்டு கிராமத்தில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. உணவு பொருள்களை தரம் பிரித்தல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற பணிகள் இங்கு நடைபெற உள்ளன. இந்த தொழிற்பேட்டைக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவையாக உள்ளது.
அதற்கு முல்லைப் பெரியாற்றில் லோயர்கேம்ப்பில் இருந்து வீரபாண்டி வரை ஆய்வு நடத்தி, சின்னமனுார் அருகில் உறை கிணறு அமைத்து, பம்பிங் செய்து, 16 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதித்து தப்புக்குண்டு தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சின்னமனுாரில் இருந்து மார்க்கையன் கோட்டை செல்லும் ரோட்டில் பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைக்கும் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. ரூ.40 கோடி மதிப்பிலான இப்பணிகள் மூலம் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தப்புக்குண்டு தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.