ADDED : ஜூன் 24, 2024 02:07 AM
கம்பம் : ஓடைப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சின்ன பொட்டிபுரத்தில் நடந்த ரத்த தான முகாமில் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.இம்முகாமை ஓடைப்பட்டி மருத்துவ அலுவலர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரியா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். ரத்த தானம் வழங்கினர். 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்வில் டாக்டர்கள் வள்ளி ராசன், ஜோதிராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் கண்ணன், தாமரை கண்ணன், ஆய்வாளர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவத் குழுவினர் செய்திருந்தனர்.* தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமிற்கு மாநில குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் அனுமந்தன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, ரத்த தானம் வழங்கினர்.