/உள்ளூர் செய்திகள்/தேனி/வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி காங்., மறியல்வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி காங்., மறியல்
வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி காங்., மறியல்
வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி காங்., மறியல்
வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரி காங்., மறியல்
ADDED : ஜன 25, 2024 05:59 AM

மூணாறு: வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மூணாறில் காங்கிரஸ் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், பூப்பாறை, பன்னியாறு உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளிடம் சிக்கி பலர் உயிரிழந்தனர். மூணாறு தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கோவை தொப்பனூர் பால்ராஜ் 79, நேற்று முன்தினம் இரவு காட்டு யானை தாக்கி இறந்தார். தவிர புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன.
மறியல்: வனவிலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் மண்டல குழு சார்பில் மூணாறில் ரோடு மறியல் செய்தனர். மண்டல தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி தொடங்கி வைத்தார். காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி, தேவிகுளம் ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், ஊராட்சி துணை தலைவர் பாலசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.