ADDED : ஜன 07, 2024 01:34 AM

போடி:தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பம், 40.
இவரது மகள் சந்தியா, 18. புஷ்பத்தின் தம்பி மாற்றுத்திறனாளி முருகேசன், 36. மூவரும் மாடியுடன் கூடிய சுண்ணாம்பு காரை வீட்டில் வசித்தனர்.
சந்தியா போடி தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். சிலமலையில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை விடிய விடிய பெய்தது. மழையால் சுண்ணாம்பு காரை வீடு நேற்று மதியம் இடிந்து விழுந்தது.
கீழ் வீட்டில் படித்துக் கொண்டிருந்த சந்தியா மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.
மாடி வீட்டில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.