ADDED : செப் 03, 2025 01:11 AM
தேனி : பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் சர்வதேச தென்னை தினவிழா கொண்டாடப்பட்டது. கோவை தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் அறவாழி தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜாஸ்மீன், தென்னை வளர்ச்சி வாரி அலுவலர் சுப்ரியா, விவசாயிகள், தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
தென்னை சாகுபடி முறைகள், தொழில்நுட்ப பயன்பாடுகள், ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல் பற்றி கல்லுாரி பேராசிரியர்கள், தென்னை வாரிய அலுவலர்கள் பேசினர்.