/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடை கட்டி தருவதாக கூறி நகை வாங்கியவர் மீது வழக்கு கடை கட்டி தருவதாக கூறி நகை வாங்கியவர் மீது வழக்கு
கடை கட்டி தருவதாக கூறி நகை வாங்கியவர் மீது வழக்கு
கடை கட்டி தருவதாக கூறி நகை வாங்கியவர் மீது வழக்கு
கடை கட்டி தருவதாக கூறி நகை வாங்கியவர் மீது வழக்கு
ADDED : செப் 20, 2025 04:41 AM
போடி: போடி புதுக்காலனியை சேர்ந்தவர் நாகநந்தினி 49. இவரிடம் போடி ஓம் சக்தி கோயில் தெருவை சேர்ந்த சுருளிமணி 50, ஜவுளி கடை கட்டித் தருவதாக கூறி ஓராண்டுக்கு முன்பு 30 பவுன் நகை வாங்கி கட்டடம் கட்டினார். கடை கட்டுவதற்கு பணம் போதவில்லை என கூறி மீண்டும் 30 பவுன் நகை வாங்கி உள்ளார்.
மேலும் பணம் தேவை என கூறி ரூ. ஒரு லட்சம் ஜி.பே., மூலம் வாங்கி உள்ளார். பணம் வாங்கியும் சுருளிமணி கடை கட்டி தராததால், 60 பவுன் நகை, ரூ.ஒரு லட்சத்தை நாகநந்தினி திரும்ப கேட்டு உள்ளார். ஒரு மாதம் ஆகியும் பணம் தரவில்லை. நாகநந்தினி புகாரில் போடி டவுன் போலீசார் சுருளி மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.