ADDED : ஜன 04, 2024 06:29 AM
பெரியகுளம்,: பெரியகுளம் நூற்றாண்டு பழமையான டவுன் யூனியன் கிளப், கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, குரு மருத்துவமனை சார்பில், இலவச புற்றுநோய், இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
டவுன் யூனியன் கிளப் தலைவர் சிதம்பரசூரியவேலு தலைமை வகித்தார்.
செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன், உறுப்பினர்கள் ரத்தினவேலு, முரளி கிருஷ்ணன் பங்கேற்றனர். முகாமில் 'மெமோகிராம்' பரிசோதனையில் மார்பக புற்றுநோய், 'பாப் ஸ்மிலியர்' பரிசோதனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் இதர புற்றுநோய் கண்டறிதல், இ.சி.ஜி., எக்கோ மூலம் இருதயநோய் கண்டறியும் பரிசோதனைகள் நடந்தன. முகாமில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். புற்றுநோய் சிறப்பு டாக்டர் லட்சுமி, டாக்டர் ரேணுகா பரிசோதனை செய்தனர்.