Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தராசுகளுக்கு முத்திரை பதிக்க அழைப்பு

தராசுகளுக்கு முத்திரை பதிக்க அழைப்பு

தராசுகளுக்கு முத்திரை பதிக்க அழைப்பு

தராசுகளுக்கு முத்திரை பதிக்க அழைப்பு

ADDED : செப் 20, 2025 11:56 PM


Google News
பெரியகுளம்: அனைத்து வணிக நிறுவனங்களின் எடை போடும் தராசுகளுக்கு முத்திரை பதிக்க ஆய்வாளர் விஜயராகவன் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியகுளம் தாலுகா முழுவதும் தங்கம் முதல் தகரம் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் எடை போடும் தராசுகளுக்கு முத்திரை அடிக்கும் முகாம், பெரியகுளம் மூன்றாந்தல் முந்தைய விமலா மருத்துவமனை கட்டடத்தில் துவங்கியது.

மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ், வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேல், பொருளாளர் விஜயகுமார் துவக்கிவைத்தனர்.

முத்திரை ஆய்வாளர் விஜயராகவன் கூறுகையில்: செப். 19 முதல் அக்.15 வரை தொடர்ந்து முகாம் நடக்கிறது.

வணிகர்கள் தங்களது எடையளவை (தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தராசுகள்) உட்பட ஓராண்டு, இராண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்த்து முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும்.

தங்களது எடையளவுகளில் எடையளக்கும் திறனில் குறைபாடு இருந்தால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பழுது பார்ப்பவர்களிடம் தராசுகளை பழுது நீக்கி, சரியான அளவீட்டில் ஆய்வாளர் முன் ஆஜராக வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு ஆய்வாளரை 73738 17843 அலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us