வீட்டின் பீரோவை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பீரோவை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பீரோவை உடைத்து நகை திருட்டு
ADDED : ஜூன் 24, 2024 02:00 AM
போடி : போடி சில்லமரத்துபட்டி கார்த்திக் 37.
இவர், குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். சில்லமரத்துபட்டியில் உள்ள இவருக்கு சொந்தமான வீடு, தோட்டத்தை அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பராமரித்து வருகிறார். பகலில் பராமரிப்பு செய்த பின் இரவில் வீட்டில் விளக்கு போட்டு விட்டு மறுநாள் காலை மணிகண்டன் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு, பெட்ரூம் கதவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்து இருந்தது. சம்பவம் குறித்து மணிகண்டன், கார்த்திக்கிற்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்த போது படுக்கை அறையில் இரும்பு பீரோ லாக்கரில் வைத்து இருந்த ரூ.ஒரு லட்சத்தி 80 ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் எடை உள்ள 4 தங்க வளையல்கள் திருடு போனது தெரிந்தது. கார்த்திக் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.