/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கியில் சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு வாபஸ் இடுக்கியில் சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு வாபஸ்
இடுக்கியில் சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு வாபஸ்
இடுக்கியில் சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு வாபஸ்
இடுக்கியில் சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவு வாபஸ்
ADDED : ஜூன் 07, 2025 12:43 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நீர்நிலை உள்பட சாகச சுற்றுலாவுக்கு விடுத்த தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றது.
இம்மாவட்டத்தில் மே 24 முதல் ஒரு வாரம் கன மழை பெய்தது. அதனால் உயிர் பலி உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. தவிர பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்ததுடன் மண் மற்றும் நிலச்சரிவு அபயாம் ஏற்பட்டது.
அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாவுக்கு தடை விதித்து மே 28ல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு மே 31ல் வாபஸ் பெறப்பட்ட போதும் படகு சவாரி உள்பட நீர்நிலை சுற்றுலாவுக்கும், டிரெக்கிங், ஜீப் சவாரி உள்பட சாகச சுற்றுலாவுக்கும் தடை நீடிக்கப்பட்டது.
மழை வெகுவாக குறைந்ததால் நீர்நிலை மற்றும் சாகச சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை வாபஸ் பெற்று உத்தரவிட்டது.