ADDED : ஜூன் 07, 2025 12:43 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ.,முகமது யஹ்யா, போலீசார் ரோந்து சென்றனர்.
குப்பாம்பட்டி விலக்கு அருகே சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் 8 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.
விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் கி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா 23, என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலில் அ.பெருமாள் பட்டியைச் சேர்ந்த சஞ்சய் 23, மணியாரம் பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம் 48, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.