/உள்ளூர் செய்திகள்/தேனி/காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி தவிர்ப்புகாட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி தவிர்ப்பு
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி தவிர்ப்பு
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி தவிர்ப்பு
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி தவிர்ப்பு
ADDED : பிப் 11, 2024 01:35 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள வேலப்பர் கோயில் மலை, கழுகுமலை, அஞ்சுகல் முடங்கி, வெள்ளப்பாறை பகுதி சார்ந்துள்ள தரை பகுதி நிலங்களில்விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். முதிர்ச்சி அடைந்த செடிகளில் விளைந்த கடலைகளை மலைப்பகுதியில் இருந்து கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் உணவாக்கி சேதப்படுத்தி செல்கின்றன.
இப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி இருந்தது. இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் பாதிப்படைகின்றனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டால் வழக்கு, அபராதம், தண்டனை என அலைக்கழிக்கின்றனர்.இதனால் இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தவிர்த்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.