ADDED : மார் 27, 2025 05:12 AM
தேனி: அல்லிநகரம் அய்யப்பன் தெரு ராதாகிருஷ்ணன் 84. இவரது அண்ணன் ராமராஜூக்கும் சொத்து தகராறு இருந்தது.
மார்ச் 23 இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் படுத்திருந்தபோது ராமராஜின் மகன் பத்ரிநாராயணன் அரிவாளுடன் நுழைந்து வெட்ட முயன்றார். அப்போது உறவினர் சீனிவாசன் வந்ததால் பத்ரிநாராயணன் தப்பிச் சென்றார். ராதாகிருஷ்ணன் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். பத்ரிநாராயணன், அவரது தந்தை ராமராஜ், தாயார் கலாவதி, உறவினர் அய்யப்பன் ஆகியநால்வர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.