ADDED : ஜன 13, 2024 03:52 AM
மூணாறு : தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் ஒரு வீட்டில் குடும்ப தகராறு நடப்பதாக தேவிகுளம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
அதனை விசாரிக்க ஏ.எஸ்.ஐ. சந்தோஷ்பாபு 40, தலைமையில் போலீசார் சென்றனர். சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றபோது அந்த வீட்டிற்குச் சொந்தமான நாய் ஏ.எஸ்.ஐ.,யை கடித்து குதறியது. அதில் பலத்த காயமடைந்தவர் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற இடத்தில் ஏ.எஸ்.ஐ.,யை நாய் கடித்ததால் விசாரணையை கைவிட்டு போலீசார் திரும்பினர்.