Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைப்பு தி.மு.க.,கூட்டணி கவுன்சிலர்களும் ' ஆப்சென்ட்'

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைப்பு தி.மு.க.,கூட்டணி கவுன்சிலர்களும் ' ஆப்சென்ட்'

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைப்பு தி.மு.க.,கூட்டணி கவுன்சிலர்களும் ' ஆப்சென்ட்'

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைப்பு தி.மு.க.,கூட்டணி கவுன்சிலர்களும் ' ஆப்சென்ட்'

ADDED : செப் 23, 2025 04:46 AM


Google News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் கோரம் இன்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க.,6, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரகலா தலைவராகவும், ஜோதி துணைத்தலைவராகவும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பேரூராட்சி தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது. ஏற்கனவே தலைவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கான கூட்டம் ஆக.,22-ல் நடந்தது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 4 மாதங்களுக்கு பின் ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டத்திற்கு தலைவர் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த 2, 16 வார்டு கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 3,15 வார்டு கவுன்சிலர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மற்ற கவுன்சிலர்கள் வரவில்லை.

ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் கூறியதாவது: பேரூராட்சி கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 6 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும். தலைவர் உட்பட 5 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். கோரம் இல்லாததால் மறு தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us