Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தீண்டாமை இல்லாத ஊராட்சியாக ஆனைமலையான்பட்டி தேர்வு! முன்மாதிரியாக திகழ்ந்ததால் அரசு ரூ.10 லட்சம் பரிசளிப்பு

தீண்டாமை இல்லாத ஊராட்சியாக ஆனைமலையான்பட்டி தேர்வு! முன்மாதிரியாக திகழ்ந்ததால் அரசு ரூ.10 லட்சம் பரிசளிப்பு

தீண்டாமை இல்லாத ஊராட்சியாக ஆனைமலையான்பட்டி தேர்வு! முன்மாதிரியாக திகழ்ந்ததால் அரசு ரூ.10 லட்சம் பரிசளிப்பு

தீண்டாமை இல்லாத ஊராட்சியாக ஆனைமலையான்பட்டி தேர்வு! முன்மாதிரியாக திகழ்ந்ததால் அரசு ரூ.10 லட்சம் பரிசளிப்பு

ADDED : பிப் 06, 2024 12:33 AM


Google News
தேனி : மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் தீண்டாமை, வன்கொடுமை செயல்கள் நடைபெறாத ஊராட்சியாகவும், பாகுபாடு இன்றி மக்கள் சமூக நல்லிணக்கமாக வாழ்ந்து வருவதால் ஆனைமலையான்பட்டி தீண்டாமை இல்லாத ஊராட்சியாக தேர்வு செய்து, அரசு ரூ.10 லடசம் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 30ல் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு அலுவலர்கள், தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுப்பது வழக்கம். சமூகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்புக்காக போராடிய தியாகிகள் நினைவாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்துபவர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உத்தமபாளையம் ஒன்றியம், ஆனைமலையான்பட்டி தீண்டாமை இல்லாத ஊராட்சி என 2023-2024 ம் ஆண்டிற்காக மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இவ்வூராட்சி நிர்வாகத்திற்கு அரசு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்துள்ளது. தேனி மாவட்ட சமூக நீதி மன்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து ஜன., 27 ல் மனித நேய வார விழா நடத்தப்பட்டது.

இது குறித்து ஊராட்சியின் தலைவர் மீனா கூறுகையில், ‛எங்கள் ஊரில் உட்கடை கிராமங்கள் இல்லை. 1950 குடும்பத்தினர் 18 சமூகத்தினர்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சமூக பிணக்குகள் கிராமத்தில் இல்லை. பல்லாண்டுகளாக ஒற்றுமையாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தீண்டாமை அற்ற ஊராட்சியாக தேர்வு செய்து அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 6540 பேர் மக்கள் தொகை உள்ளனர்.கடந்த குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தீண்டாமை இல்லாத கிராமமாக தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் ஷஜீவனா அறிவித்தார். வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ஊராட்சி மன்ற முடிவின்படி வளர்ச்சித்திட்டங்களுக்கு பகிர்ந்தளித்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் எங்கள் ஊராட்சிப்போல் பிற ஊராட்சிகளும் தீண்டாமை அறற ஊராட்சிகளாக மாற எங்களால் ஆன விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.', என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us