/உள்ளூர் செய்திகள்/தேனி/நிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 20 நாட்களுக்கு பின் குறைந்ததுநிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 20 நாட்களுக்கு பின் குறைந்தது
நிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 20 நாட்களுக்கு பின் குறைந்தது
நிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 20 நாட்களுக்கு பின் குறைந்தது
நிரம்பிய வைகை அணை நீர்மட்டம் 20 நாட்களுக்கு பின் குறைந்தது
ADDED : ஜன 25, 2024 01:35 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் கடந்த 20 நாட்களாக 71 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 70.85 அடியாக குறைந்தது.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது.
தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகளால் தொடர்ந்து அதிகரித்த அணை நீர்மட்டம் ஜன., 6 அதிகாலை 4:45 மணிக்கு முழு அளவான 71 அடியாக உயர்ந்து நிரம்பியது.
பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் முழுவதும் பெரிய, சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது.
உபரிநீரின் அளவு அதிகபட்சமாக வினாடிக்கு 5500 கனஅடி வரை வெளியேறியது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் வெளியேறும் நீரின் அளவும் குறைந்தது.
நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 1369 கன அடி நீர் வெளியேறியது.
அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 916 கன அடியாக இருந்தது. வரத்தை விட வெளியேற்றம் அதிகம் உள்ளதால் அணை நீர்மட்டம் நேற்று 70.85 அடியாக குறைந்தது.