/உள்ளூர் செய்திகள்/தேனி/ நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஜூன் 16, 2025 12:28 AM
தேனி: 'நெல் பயிரை குலை நோய் தாக்காமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்.' என, பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் மணிகண்ட பிரசன்னா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பெரியகுளம் வட்டாரத்தில் சுமார் 600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிரை தாக்கும் குலை நோய் அறிகுறிகளாக இலைகளின் மேல் சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்கள், கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒருங்கிணைந்து பயிர் முழுவதும் எரிந்தது போன்று காட்சியளிக்கும். கதிர் வெளிவந்ததும் பயிர்கள் சாய்ந்துவிடும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிற, பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். நெற்கதிர்கள் உடைந்து தொங்கும். இந்நோய் பாதித்தால் கதிர் உருவாகாது. உருவானாலும் தானியம் குறைந்த தரத்துடன் காணப்படும்.
இந்நோய் வராமல் தடுக்க அதிக தழைச்சத்து உரம் இட வேண்டும். வரப்பில் களைகளை அழிக்க வேண்டும்.
அசாக்ஸிஸ்டோரபின் ஒரு எக்டேருக்கு 500 மி.லி., அல்லது நடவு செய்து 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியை 0.5 சதவீதம் என்ற அளவில் 3 முறை தெளிக்கலாம். அறுவடைக்குப் பின் குழைநோய் பாதித்த வயல்களில் வைக்கோல், துார்களை எரித்து விட வேண்டும். இவ்வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் குலைநோயை கட்டுப்படுத்தலாம்., என்றார்.