Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., கைதுக்கு காரணமான ‛அடுக்கம் மகேஸ்வரி'

17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., கைதுக்கு காரணமான ‛அடுக்கம் மகேஸ்வரி'

17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., கைதுக்கு காரணமான ‛அடுக்கம் மகேஸ்வரி'

17 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., கைதுக்கு காரணமான ‛அடுக்கம் மகேஸ்வரி'

ADDED : ஜூன் 18, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
தேனி:காதல் திருமண விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் டி.ஜி.பி.,யுடன் தொடர்பில் இருந்த மதுரை சிலைமானை சேர்ந்த மகேஸ்வரி குறித்து கூடுதல் தகவல் தெரியவந்துள்ளது.

அதன் விபரம் வருமாறு:

மதுரை மாவட்டம் சிலைமானை பூர்வீகமாக கொண்டவர் மகேஸ்வரி. இவர் காவலர் பணியில் சேர்ந்து பழநி பாட்டாலியனில் பணியில் இருந்த போது, போலி சான்றிதழை வழங்கி காவலர் பணியில் சேர்ந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவர். பின் ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி., உட்பட பல்வேறு உயர் பதவிகளில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரைக்கூறி கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். இந்த கட்டப் பஞ்சாயத்துக்களை கொடைக்கானல் தாலுகா அடுக்கத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள வீட்டில் வைத்து பேசுவதும், அங்கு பல்வேறு ‛டீலிங்'நடத்தி வந்துள்ளார்.

இதில் போலீசார், அவரிடம் பழகியவர்கள், ‛‛அடுக்கம் மகேஸ்வரி அக்கா'என கூப்பிடும் அளவிற்கும் பொருளாதாரத்திலும் பலமாக இருந்துள்ளார்.

தேனி மாவட்டம், வருஷநாடு தென்னை நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த ஒருவருடன் மகேஸ்வரிக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அந்த நபரிடம் விஜய்ஸ்ரீயின் தந்தை வனராஜா உதவி கேட்க, அவர் அடுக்கம் மகேஸ்வரியின் உதவியை நாடி உள்ளார். அதன்பின் கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமை தொடர்பு கொண்டு மகேஸ்வரி உதவி கேட்டுள்ளார்.

அதற்கு பின்தான் கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் தனது வாகனத்தை கடத்தல் சம்பவத்திற்கு கொடுத்து கைதாகியுள்ளார்.

போலீசார் கூறுகையில், அடுக்கம் தோட்ட வீட்டில் பல அரசியல்வாதிகள், போலீசார் பஞ்சாயத்து பேசவே சென்று வருவர். முன்னாள் டி.ஜி.பி., ஒருவர் மூலம் மகேஸ்வரி காரியம் சாதித்து வந்தார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடித்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் வசித்து வருகிறார் என்றனர். இந்த வழக்கு விசாரணை வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் மேற்பார்வையில் நடந்து வருவதால், கூடுதல் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us