/உள்ளூர் செய்திகள்/தேனி/ விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : அக் 02, 2025 11:59 PM
தேனி; தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் பெரியகுளம் துணை ஆய்வாளர், பெரியகுளம், தேனி, போடி, கம்பம் உதவி ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான காந்திஜெயந்தி அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை, சம்பளத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என 49 கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விதிமுறைகளை மீறிய 39 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.


