/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பீரமாக நிற்கும் 145 ஆண்டு கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும் கம்பீரமாக நிற்கும் 145 ஆண்டு கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும்
கம்பீரமாக நிற்கும் 145 ஆண்டு கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும்
கம்பீரமாக நிற்கும் 145 ஆண்டு கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும்
கம்பீரமாக நிற்கும் 145 ஆண்டு கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும்
ADDED : ஜூன் 16, 2025 12:21 AM

பெரியகுளம்: ''பெரியகுளத்தில் 145 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நீதிமன்றம் தற்போதும் பழமை மாறாமல் புதுப்பித்தும் பயன்பாடின்றி உள்ளது.
இக்கட்டடத்தில் மாவட்ட அருங்காட்சியகம் அமைக்க துணை முதல்வர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.
பெரியகுளத்தில் 1880ல் ஆங்கிலேயரால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றம் கட்டப்பட்டது. இங்கு பல ஆண்டுகளாக செயல்பட்ட நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
அதன்பின் கட்டடத்தை பாதுகாக்கும் நோக்கில் அதன் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, தயிர், முட்டை கலவையால் புதுப்பிக்கப்பட்டது.
இக்கட்டடத்தின் உறுதியும் கட்டுமானத்தின் நேர்த்தியும், மின்சாரம் இல்லாவிட்டாலும் கட்டடத்தின் உட்புறம் குளிர்ச்சியாகவே இருக்கும்.
பொதுப்பணித்துறை 3600 சதுரடி கட்டடத்தை ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் 2022ல் புதுப்பித்தனர்.
மீண்டும் புதுப்பிப்பு
எவ்வித பயன்பாடும் இன்றி கம்பீரமாக காட்சியளிக்கும் நீதிமன்றம், பயன்பாடு இன்றி சேதமாகிறது. மே மாதம் மீண்டும் 2வது முறையாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. கட்டடம் எந்த பயன்பாடு இன்றி புதுமையாக மிளிர்கிறது.
அருங்காட்சியகத்திற்கு அருமையான இடம்
தேனி மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நெருக்கடியில் செயல்படுகிறது.
எனவே பெரியகுளத்தில் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். துணை முதல்வர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-