/உள்ளூர் செய்திகள்/தேனி/தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடி வனத்துறை தீவிர விசாரணைதனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடி வனத்துறை தீவிர விசாரணை
தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடி வனத்துறை தீவிர விசாரணை
தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடி வனத்துறை தீவிர விசாரணை
தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடி வனத்துறை தீவிர விசாரணை
ADDED : ஜன 01, 2024 06:19 AM

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை பொன்னம்படுகை அருகே ரோட்டின் ஓரம் தனியார் தோட்டம் உள்ளது. இங்கு எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் கரடி இறந்து அழுகிய நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடியின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகப்படும் படியான காயங்கள் எதுவும் இல்லை.
இதனை தொடர்ந்து கரடியின் உடல் பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. வயது முதிர்வு அல்லது நோய் ஏற்பட்டு கரடி இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே, கரடி இறந்தது குறித்து உண்மையான தகவல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.