/உள்ளூர் செய்திகள்/தேனி/வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குவேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
ADDED : பிப் 25, 2024 04:11 AM
உத்தமபாளையம் : க. புதுப்பட்டியை சேர்ந்த பெண்ணிடம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்
க.புதுப்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அனிஷா 33, இவரிடம் ஆண்டிபட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 2023 ஜனவரியில் ' தான் இந்தியன் மீடியா கவுன்சிலில் வேலை பார்ப்பதாகவும், தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பழக்கம்', என்றும் கூறியுள்ளார். அனிஷாவிற்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி, தருவதாகவும், அவரது தங்கைக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி வாங்கித் தருவதாகவும் கூறி இருவரிடமும் தலா ரூ. ஒரு லட்சம் விதம் ரூ. 2 லட்சத்தை வாங்கி உள்ளார். வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, தராமல் ஏமாற்றியுள்ளார். அனிஷா உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.