/உள்ளூர் செய்திகள்/தேனி/64 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்64 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
64 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
64 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
64 சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
ADDED : பிப் 12, 2024 05:47 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் அமைக்கப்பட்ட போலீசின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் 'சிசிடிவி கேமராக்கள்' அனைத்தும் பழுதானதால் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் தென்கரையில் 40, வடகரையில் 24 என, 64 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் பதிவுகளை வடகரை ஸ்டேஷனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்தனர். பதிவுகளை 14 நாட்கள் வரை பாதுகாக்கப்பட்டன. இப்பணிக்கு சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனால் செயின் பறிப்பு, இரவில் கடைகள் உடைத்து திருட்டு சம்பவங்கள் கண்காணித்து நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டன. பல வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றங்கள் குறைந்து இருந்தது.
முடக்கம்
கடந்தாண்டு முதல் ஒவ்வொரு கேமராக்களும் பழுதானது. தற்போது 64 கேமராக்களும் பழுதாகி உள்ளன. இதனால் கட்டுப்பாட்டு அறை முடங்கியுள்ளது. இதனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். சில தினங்களுக்கு முன் தென்கரை பெருமாள் கோயில் பகுதியில் பட்டப்பகலில் 'ஹெல்மெட்' அணியாத இரு மர்ம நபர்கள் பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இந்தச் சம்பவம் போலீசாருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. பெரியகுளத்தில் ஏராளமான வங்கிகள் உள்ளன. புதிய நவீன கேமராக்கள் வாங்குவதற்கு உதவி செய்ய தயாராக உள்ளன. நகராட்சி தலைவர், டி.எஸ்.பி., முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து உடனடியாக புதிய கேமராக்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.