/உள்ளூர் செய்திகள்/தேனி/மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300 பேர் கைதுமறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300 பேர் கைது
ADDED : ஜன 31, 2024 06:40 AM

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.' என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கம்பம் ரோடு பழைய பள்ளிவாசல் ரோட்டில் இருந்து நேரு சிலை அருகே வரை ஊர்வலமாக வந்தனர். பின் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக நடந்த ஊர்வலத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜ்தீன் தலைமை வகித்தார்.
உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெத்தனசாமி, நேரடி நியமன முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராம்குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் பெரியசாமி, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மறியலில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.