/உள்ளூர் செய்திகள்/தேனி/வீரபாண்டி அருகே ரூ.3 கோடியில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்வீரபாண்டி அருகே ரூ.3 கோடியில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
வீரபாண்டி அருகே ரூ.3 கோடியில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
வீரபாண்டி அருகே ரூ.3 கோடியில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
வீரபாண்டி அருகே ரூ.3 கோடியில் ரோடு விரிவாக்க பணி தீவிரம்
ADDED : ஜன 31, 2024 06:42 AM
தேனி: மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் உட்கோட்டத்தில் 122 கி.மீ., ரோடு பராமரிக்கப்படுகிறது. இதில் வீரபாண்டி முதல் கொடுவிலார்பட்டி வரை உள்ள ரோடு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த ரோட்டில் முதற்கட்டமாக வயல்பட்டியில் இருந்து 2.8 கி.மீ., துாரம் உள்ள ரோடு ரூ.3 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 5.5 மீ., அகலமுடைய ரோடுகள், 7 மீ., அகலமுடைய ரோடாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிவு பெற்றால் வீரபாண்டி திருவிழா நாட்கள், ஏதேனும் போக்குவரத்து மாற்றும் நாட்களில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் கோவிந்தநகரம், காட்டுநாயக்கன்பட்டி பகுதிகளிலும் ரோடு விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளது.