/உள்ளூர் செய்திகள்/தேனி/18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 06, 2024 06:42 AM
கூடலுார்: 18ம் கால்வாய் கரை உடைப்பை விரைந்து சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் துவங்கி கூடலுார், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 47 கி.மீ., தூரம் உள்ள 18ம் கால்வாயில் டிச.19ல் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 90 கன அடி நீர் வீதம் 30 நாட்களுக்கு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பதற்கு முன் கால்வாயின் கரைப்பகுதி சீரமைக்கப்படவில்லை. இதனால் திறந்த ஓரிரு நாட்களிலேயே லோயர்கேம்ப் அருகே தொட்டிப் பாலத்தில் நீர் கசிவு அதிகம் ஏற்பட்டது. நீர்வளத்துறையினர் தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைத்தனர்.
இந்நிலையில் டிச. 31ல் கால்வாயின் தலை மதகுப்பகுதி அருகே கரைப்பகுதி உடைந்து தண்ணீர் விவசாய நிலம் வழியாக வெளியேறியது. இதனால் நீர்திறப்பு நிறுத்தப்பட்டு சீரமைப்புப் பணியை நீர்வளத்துறையினர் துவக்கினர். ஐந்து நாட்களாகியும் சீரமைப்பு பணி முழுமை அடையவில்லை. உடைப்பு ஏற்பட்ட பகுதியை விரைந்து சீரமைத்து உடனடியாக தண்ணீர் திறக்க 18ம் கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.