/உள்ளூர் செய்திகள்/தேனி/நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவுநகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
புகார்
துணைத்தலைவர் செல்வம் தலைமையில் அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்கள் 12 பேர் , 'நகராட்சி தலைவரின் கணவர் 3வது வார்டில் சாக்கடை அமைத்து தருவதாக பொதுமக்களிடம் பலரிடம் பணம் பெற்றது, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் வாரச்சந்தை மற்றும் கட்டண கழிப்பறையை குறைந்த தொகைக்கு ஏலம் விட பணம் பெற்றது, கவுன்சிலர்களை மிரட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து முதல்வர்,அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர், கலெக்டர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பினர்.
தயார்
நகராட்சித்துணைத்தலைவர் கூறுகையில், கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நகராட்சி தலைவர், அவரது கணவர் செயல்படுகின்றனர். இதனால் அவரை மாற்ற கோரி தி.மு.க., கூட்டணியினர் மனு அனுப்பி உள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க., கூட்டணி மற்றும் வேறு சில கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் பலர் ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
அவதுாறு
நகராட்சித்தலைவர் ரேணுப்பிரியா, கணவர் பாலமுருகன் கூறுகையில்'' ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவிக்க கம்பம் சென்றோம். கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய உள்ளது பற்றி எதுவும் தெரியாது. எங்கள் மீது அவதுாறான வகையில் சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர். நகராட்சியில் நடந்த சிறப்பு கூட்டம், அறிவுசார் மையம் திறப்பு விழாவில் பங்கேற்காதது கவுன்சிலர்கள் விருப்பம் ''என்றனர்.


