/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம் சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 01, 2024 04:15 AM
தேனி : மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின கீழ் 69 சிப்பம் கட்டும் அறைகள், 80 வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க இலக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காய்கறிகள், பூக்கள், உள்ளிட்ட தோட்டக்கலைத் துறைக்கு உட்பட்டப் பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமிக்கவும், அறுடைக்குப் பின் இழப்புகளை தவிர்க்கவும் சிப்பம் கட்டும் அறைகள் பயன்படுகின்றன.
தோட்டக்கலைத்துறை சார்பில் சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 69 சிப்பம் கட்டும் அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே போல் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை பாதுகாத்து வைக்கவும், சந்தையில் விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்ய வெங்காயம் சேமிப்புக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் அரசு மானியத்தில் 80 வெங்காய சேமிப்புக் கூடங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் சேமிப்புக் கூடம் அமைக்க 50 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ. 87 ஆயிரத்து 500 வழங்கப்பட உள்ளது. சிப்பம் கட்டும் அறை, வெங்காயம் சேமிப்பு கூடம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார் நகல் உள்ளிட்ட சான்றுகளுடன் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.