/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 12, 2024 12:05 AM
தேனி : அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்காக 23 பள்ளி விடுதிகள், கல்லுாரி விடுதிகள் 6 செயல்படுகிறது. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் சேரலாம். மாணவர்களுக்கு விடுதியில் தங்கும் வசதி, உணவு வழங்கப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வினா வங்கி வழங்கப்படும். மலைப்பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் கம்பளி வழங்கப்படும்.
விடுதியில் சேரும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 8 கி.மீ., தொலைவு இருக்க வேண்டும். விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளி விடுதிகளில் ஜூன் 14, கல்லுாரி விடுதிகளில் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சலுகைகளை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.