/உள்ளூர் செய்திகள்/தேனி/ குலதெய்வ கோயில்களில் நடிகர் தனுஷ் வழிபாடு குலதெய்வ கோயில்களில் நடிகர் தனுஷ் வழிபாடு
குலதெய்வ கோயில்களில் நடிகர் தனுஷ் வழிபாடு
குலதெய்வ கோயில்களில் நடிகர் தனுஷ் வழிபாடு
குலதெய்வ கோயில்களில் நடிகர் தனுஷ் வழிபாடு
ADDED : ஜூலை 23, 2024 09:41 PM

ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே முத்துரங்காபுரத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இங்கு திருப்பணி முடிந்து சமீபத்தில் கும்பாபிேஷகம் நடந்தது. இதற்கான பொருளுதவியை தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா அதிகம் செய்தார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது திரைப்படமான ராயன் ஜூலை 26ல் ரிலீஸ் ஆகிறது. இதில் அவருடன் அண்ணன் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து தனுஷ் , செல்வராகவன், தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் குடும்பத்தினர் முத்துரங்காபுரம் குலதெய்வ கோயிலில் தரிசனம் செய்தனர்.
பின்னர் போடியில் உள்ள தனுஷின் தாயார் விஜயலட்சுமியின் குலதெய்வ கோயிலும் தரிசித்தனர். அதன்பின் போடி அருகே சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு தனுஷ், பெற்றோர் கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி, மகன்கள் , செல்வராகவன் ஆகியோருடன் சென்று தரிசித்தார்.