/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுகாதார துணை இயக்குனர் பணியிட பெயர் மாற்றம் சுகாதார துணை இயக்குனர் பணியிட பெயர் மாற்றம்
சுகாதார துணை இயக்குனர் பணியிட பெயர் மாற்றம்
சுகாதார துணை இயக்குனர் பணியிட பெயர் மாற்றம்
சுகாதார துணை இயக்குனர் பணியிட பெயர் மாற்றம்
ADDED : ஜூலை 23, 2024 08:51 PM
கம்பம்:அரசு மருத்துவமனைகள், அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்கள் கட்டுப்பாட்டிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதாரத் துறை துணை இயக்குனர் கட்டுப்பாட்டிலும் செயல்படுகிறது. தற்போது சுகாதாரத் துறையில் மாவட்ட அதிகாரியாக உள்ள துணை இயக்குனர் என்ற பதவி பெயரை, மாவட்ட சுகாதார அலுவலர் என மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரம், தொழு நோய் தடுப்பு, காசநோய் தடுப்பு என மூன்று துணை இயக்குனர்கள் உள்ளனர். இதில் காசநோய் மற்றும் தொழுநோய் பிரிவுகளுக்கு நேரடியாக துணை இயக்குனர் நியமனம் கிடையாது. குறைந்தது 20 ஆண்டுகளுக்கு மேல் அதில் பணியாற்றியவர்களுக்கு இப்பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
'ஆனால் சுகாதார துணை இயக்குனர் பதவிக்கு நேரடி நியமனம் உள்ளது. மருத்துவ கல்வியை முடித்தவர்கள் டி.பி.எச்., என்ற படிப்பை படித்தால், துணை இயக்குனராக நியமனம் செய்ய வாய்ப்புண்டு. பணி அனுபவம் இல்லாமல் கூட நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். எனவே, இரு தரப்பிற்கும் இடையே 'ஈகோ 'வந்து விடக் கூடாது என்பதற்காக துணை இயக்குனர் சுகாதாரம் பணியிடத்தை மாவட்ட சுகாதார அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது' என்றனர்.