/உள்ளூர் செய்திகள்/தேனி/ அடிப்படை வசதிக்கு தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்; ஏத்தக்கோயில் ரோட்டில் ஓடைப்பாலம் தேவை அடிப்படை வசதிக்கு தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்; ஏத்தக்கோயில் ரோட்டில் ஓடைப்பாலம் தேவை
அடிப்படை வசதிக்கு தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்; ஏத்தக்கோயில் ரோட்டில் ஓடைப்பாலம் தேவை
அடிப்படை வசதிக்கு தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்; ஏத்தக்கோயில் ரோட்டில் ஓடைப்பாலம் தேவை
அடிப்படை வசதிக்கு தவிக்கும் வாரச்சந்தை வியாபாரிகள்; ஏத்தக்கோயில் ரோட்டில் ஓடைப்பாலம் தேவை
ADDED : ஜூன் 26, 2024 07:46 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வாரச் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொது மக்கள் வளாகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
இச்சந்தையானது திங்கள் கிழமைகள்தோறும் நடப்பது வழக்கம். தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். வாரச்சந்தையில் காலையில் நடக்கும் ஆட்டுச்சந்தை முக்கிய பங்காற்றுகிறது.
தொலைதூரத்தில் இருந்து வரும் வியாபாரிகள் சிலர் முதல் நாள் இரவே சந்தை வளாகத்திற்கு வந்து விடுகின்றனர். திங்கள்கிழமை சந்தை முடிந்த பின் சில வியாபாரிகள் கடையை முடித்து செல்வதற்கு இரவில் தாமதமாகிறது. வாரச்சந்தை வளாகத்தில் போதுமான தெருவிளக்கு வசதிகள் இல்லை.
மழைநீர், கழிவு நீர் கடந்து செல்வதற்கு வடிகால் வசதி இல்லை. இரு நாட்கள் தங்கிச் செல்லும் வியாபாரிகளுக்கு கழிப்பறை, குளியலறை வசதி இல்லை.
100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாரச்சந்தைக்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் கழிப்பறை வசதி இன்றி சிரமப்படுகின்றனர்.
பொது மக்கள் கூறியதாவது: வாரச்சந்தைக்கு ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து மெயின் ரோடு, நாடார் தெரு, கடைவீதி வழியாக வாரச்சந்தை சென்று வர வேண்டும். இப்பாதைகளில் அதிகளவில் கடைகளை அமைப்பதால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் இருந்து வாரச்சந்தைக்கு அப்பகுதி ஓடையில் பாலம் அமைத்து புதிய பாதை ஏற்படுத்த வேண்டும். புதிய பாதை அமைவதால் நாடார் தெரு, கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். பொது மக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு எளிதில் சென்று வரலாம்., என்றனர்.