/உள்ளூர் செய்திகள்/தேனி/ கனவு இல்லம் திட்ட வழிமுறைகள் திருத்த மாநில அளவில் ஆர்ப்பாட்டம் கனவு இல்லம் திட்ட வழிமுறைகள் திருத்த மாநில அளவில் ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்ட வழிமுறைகள் திருத்த மாநில அளவில் ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்ட வழிமுறைகள் திருத்த மாநில அளவில் ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்ட வழிமுறைகள் திருத்த மாநில அளவில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:47 AM
தேனி : கனவு இல்லம் திட்டத்திற்கு வழிமுறைகள் திருத்தி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும், ஜூலை 1ல் கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறியதாவது: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் தமிழகத்தில் 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கும், ஊரக வீடுகள் பழுது நீக்கம் செய்யும் திட்டத்திற்கும் உரிய பணியிடங்கள் வழங்க வேண்டும்.
கனவு இல்ல திட்டத்தில் பயனாளர்கள் தேர்வு தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட வேண்டும்.
இரு திட்டங்களையும் செயல்படுத்திட போதிய அவகாசம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும், ஜூலை 1ல் கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது., என்றார்.