ADDED : ஜூலை 03, 2024 02:14 AM
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து இன்று (ஜூலை 3) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இரு போக பாசனப்பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது என்றனர்.