/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதை பொருட்கள் கடத்திய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் போதை பொருட்கள் கடத்திய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
போதை பொருட்கள் கடத்திய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
போதை பொருட்கள் கடத்திய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
போதை பொருட்கள் கடத்திய 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
ADDED : ஜூலை 03, 2024 01:58 AM

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சர்வதேச போதை பொருட்களான 'மெத்தம்பெட்டமைன், லைசிரிக் ஆசிட் டைத்லிலிமைட், கொகைன்' கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் கடந்த 29ல் எ.புதுப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கொடைக்கானலில் இருந்து கம்பம் சென்ற காரை சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா, 50 கிராம் எடையில், 30 மெத்தம்பெட்டமைன் பாக்கெட்டுகள் இருந்தன.
கார் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கொடைக்கானல் நாயுடுபுரம் விகாஸ் ஷியாம், 22, ஆரிப்ராஜா, 22, நாராயணத்தேவன்பட்டி ராம்குமார், 33, ஆகியோரை கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்த சல்மான்கான், 26, என்பவர் தப்பினார். தேனி எஸ்.பி., சிவபிரசாத் விசாரித்தார்.
ஆரிப்ராஜா கஞ்சா கடத்தல், மற்ற இருவரும் மெத்தம்பெட்டமைன் வழக்கில் கைதாகினர். தனிப்படை போலீசார் கோவையில் அன்பழகன், 24. ஆனந்த், 38. பெங்களூரில் யாசர் முக்தார், 36, ஆகியோரை 30ம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 கிராம் மெத்தம்பெட்டமைன், தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் மற்றும் 100 கிராம் கஞ்சா, விலையுயர்ந்த ஐந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்களுக்கு போதைப்பொருள் வினியோகிக்கும் நோகன் என்பவரை கைது செய்ய போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். கைதானவர்களை பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். ஐந்து பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி கமலநாதன் உத்தரவிட்டார்.