/உள்ளூர் செய்திகள்/தேனி/ விநாயகர் கோயிலுக்கு நகராட்சியில் பூட்டு: ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு விநாயகர் கோயிலுக்கு நகராட்சியில் பூட்டு: ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
விநாயகர் கோயிலுக்கு நகராட்சியில் பூட்டு: ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
விநாயகர் கோயிலுக்கு நகராட்சியில் பூட்டு: ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
விநாயகர் கோயிலுக்கு நகராட்சியில் பூட்டு: ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 20, 2024 12:49 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் வழிபாட்டு நடைமுறைகளை நிறுத்தி, பூட்டுப்போட்டதால் ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நகராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் அலுவலக வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அறைகளுக்கு எதிரே மரத்திடியில் விநாயகர் கோயில் அமைத்து வழிபட்டனர். இந்நிலையில் பூஜை செய்ய ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் கோயில் கேட்டை பூட்டி பூஜை நடக்காமல் நகராட்சி மூடியுள்ளது. பல ஆண்டுகளாக தினசரி விநாயகரை வழிபட்டு பணிகளை துவக்கி வந்த ஊழியர்கள், அலுவலகம் வரும் பொது மக்கள் வழிபாடு நடக்காததால் வேதனை அடைந்தனர். இதற்கான உத்தரவிட்ட நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுடன், கலெக்டரிடம் மனு அளிக்கவும் உள்ளோம் என, ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகன் தெரிவித்தார்.