ADDED : ஜூலை 07, 2024 02:41 AM

பெரியகுளம்: பெரியகுளம் அம்பேத்கர் சிலை முன்பு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள், கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் காமாட்சி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சுசிதமிழ்பாண்டியன், சிவனேசன் முன்னிலை வகித்தனர்.
மண்டல செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகர செயலாளர் ஜோதி முருகன், ஒன்றிய செயலாளர் ஆண்டி, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டத்தில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.