மழையால் பசுமையானது வைகை அணைப்பூங்கா
மழையால் பசுமையானது வைகை அணைப்பூங்கா
மழையால் பசுமையானது வைகை அணைப்பூங்கா
ADDED : ஜூன் 04, 2024 06:09 AM

ஆண்டிபட்டி : கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் வைகை அணைப்பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது.
வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தேனி மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை மற்றும் பூங்காவை ரசித்துச் செல்ல தவறுவதில்லை.
கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த கோடை வெயிலால் வைகை அணை பூங்காவில் இருந்த செடி கொடிகள், புல் தரைகள் காய்ந்து சருகுகளாக இருந்தன.
வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் வைகை அணைக்கு சுற்றுலா செல்வதை பலர் தவிர்த்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து பெய்த கோடை மழையால் வைகை அணை பூங்காவில் மரம் செடி கொடிகள் புத்துணர்வு பெற்று பசுமையாக காட்சியளிக்கின்றன.
வெயில் இல்லாத நாட்களில் நிலவும் குளுமையான சூழல் சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழைக்கான காலம் துவங்க இருப்பதால் வைகை அணையில் நிலவும் பசுமையான சூழல் இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் நிலை உள்ளது.