/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாப்ஸ் அணி சாம்பியன் மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாப்ஸ் அணி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாப்ஸ் அணி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாப்ஸ் அணி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாப்ஸ் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 04, 2024 06:09 AM

பெரியகுளம் : பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பாப்ஸ் கூடைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பெரியகுளம் சோத்துப்பாறை ரோடு பாப்ஸ் அகாடமி மைதானத்தில், தேனி மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி மூன்று நாட்கள் நடந்தது. பெரியகுளம்,தேனி, போடி, கூடலூர், ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 18 கூடைபந்து அணிகள் மோதினர்.
போட்டிகள் நாக் அவுட், லீக் சுற்று போட்டிகளாக பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடந்தது.
முதலிடத்தை பிடிக்க பெரியகுளம் பாப்ஸ் கூடைப்பந்து அணியும், சில்வர் ஜூப்ளி கூடைப்பந்து அணியும் மோதியது. பாப்ஸ் கூடைப்பந்து அணி 76:46 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாம் இடத்தை புள்ளிகள் அடிப்படையில் கம்பம் பென்னிகுக் அணியும், மூன்றாம் இடத்தை சில்லர் ஜூப்ளி அணி பெற்றது.
பரிசளிப்பு விழாவிற்கு எல்.எஸ்.மில்., நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தமிழக கூடைப்பந்து பயிற்சியாளர்கள் தலைவர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். வர்த்தக பிரமுகர் சிவக்குமார், டாக்டர் பாண்டியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதலிடம் பிடித்த பாப்ஸ் கூடைப்பந்து அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசு உட்பட வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பெரியகுளம் கேப்பிட்டல் ஸ்போர்ட்ஸ், பாப் கூடைப்பந்து கழகம், பாப் விளையாட்டு அகடாமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.