ADDED : ஜூன் 01, 2024 05:15 AM
ஆண்டிபட்டி: ராஜதானி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் நடராஜன் 42, விவசாயம் செய்து வரும் இவர் 3 நாட்களுக்கு முன் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டில் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.
கணேசபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி இருசக்கர வாகனத்தை திருடி தள்ளி சென்றார்.
அந்த வழியாக நடராஜன் நண்பர் கணேசன் சென்றுள்ளார். வாகனத்தை அடையாளம் கண்டதுடன், உருட்டிச் சென்றவர் மீது சந்தேகம் அடைந்த கணேசன் இது குறித்து நடராஜனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் மீண்டும் வாகனத்தை தேடி சென்ற போது ஏ.பெருமாள்பட்டி செல்லும் ஒத்தையடி பாதையில் அதிகாலை 3:00 மணிக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துப்பாண்டி ஓடிவிட்டார். அக்கம் பக்கம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருசக்கர வாகனத்தை எடுத்து வீட்டில் நிறுத்திவிட்டு ராஜதானி போலீசில் நடராஜன் கொடுத்த புகாரில் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.