டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
ADDED : ஜூலை 31, 2024 04:55 AM
போடி, : போடி டி.வி.கே.கே., நகர் வஞ்சி ஓடை தெருவை சேர்ந்தவர் பிலாவடியன் 50. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் பார்க்கும் போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன் தினம் போடி குலார்பாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைத்து இருந்தது தெரிந்தது.
சிறுவனை பிடித்து விசாரித்ததில் டொம்புச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுவனிடம் ரூ.5800 விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் டூவீலரையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போடி டவுன் போலீசார் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.