ADDED : ஜூன் 03, 2024 03:47 AM
போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி படேல் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் 69.
இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 10 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். இதுபோல போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்த ராஜா 40., அனுமதி இன்றி 7 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து, இருவரிடமும் 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.