/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 03, 2024 03:47 AM
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பரப்பளவு அதிகம் உள்ளதால் எஸ்.ஐ., ஸ்டேஷனை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்த வேண்டும்.
பெரியகுளம் சப்-டிவிஷன் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கூடுதல் கட்டுப்பாட்டில் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் ஜெயமங்கலம், மேல் மங்கலம், கோயில்புரம், குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, ஏ.வாடிப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி உட்பட 15 கிராமங்கள், 10 உட்கடை கிராமங்கள் உள்ளன. எல்கை பரப்பளவு அதிகம்.
இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2 ஆண்டுகளில் 220 வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு அடிக்கடி சமூக ரீதியான மோதல்கள் ஏற்பட்டு, பாதுகாப்பிற்கு போலீசார் அதிகம் குவிக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் போலீசார் திணறுகின்றனர். ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.