ADDED : ஜூலை 30, 2024 06:21 AM
போடி : போடி அருகே சுந்தரராஜபுரம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுலோக்சனா 31. டீ கடை வைத்துள்ளார். இவர் தனது கணவருடன் டூவீலரில் பெருமாள் கவுண்டன்பட்டிக்கு சென்றுள்ளார்.
வழியில் பின்பக்கமாக டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி வேகமாக வந்த நபர் சுலோக்சனாவின் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார்.
செயினை பிடித்து கொண்டதால் செயின் அறுந்த நிலையில் கையில் சிக்கி கொண்டது. போடி தாலுகா போலீசார் செயின் பறிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர்.