/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிய வர்த்தகர்கள் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிய வர்த்தகர்கள்
கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிய வர்த்தகர்கள்
கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிய வர்த்தகர்கள்
கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றிய வர்த்தகர்கள்
ADDED : ஜூலை 03, 2024 05:37 AM
கம்பம் : கம்பம் மெயின்ரோட்டில் கடைகளுக்கு முன் அமைத்திருந்த கூரைகளை வர்த்தகர்களே அகற்றி கொண்டனர்.
ஆக்கிரமிப்புகள் அனைத்து ஊர்களிலும், அனைத்து இடங்களிலும் உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை பகுதிகள், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்குகின்றன. நெடுஞ்சாலைகளில் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து, ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.
கம்பத்தில் அரசு போக்குவரத்துக்கழக பனிமனையில் ஆரம்பித்து அரசு மருத்துவமனை வரை இரண்டு பக்கமும் உள்ள கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக கூறி நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் வந்தனர். வழக்கம் போல நேற்றிரவு முதல் கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கூரைகள், தகரங்களை வர்த்தகர்கள் அவர்களாகவே அகற்றினர். நெடுஞ்சாலைத் துறையினர் அமைதியாக பார்த்து சென்றனர். ஆண்டிற்கு ஒரு முறை இது போன்று தகரங்களை பிரித்து போட கணிசமான பணம் செலவழிப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.