முன் விரோதத்தில் தாக்கிய இருவர் கைது
முன் விரோதத்தில் தாக்கிய இருவர் கைது
முன் விரோதத்தில் தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூலை 03, 2024 05:38 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே ராஜப்பன் கோட்டையைச் சேர்ந்தவர் அய்யாதுரை 75, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி 52 என்பவருக்கும் தோட்ட பொதுக் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் அய்யாதுரை அவரது வீட்டு முன் நின்ற போது செல்லப்பாண்டி 52, அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் தகராறு செய்து அய்யாத்துரை அவரது மகள் செல்வி ஆகியோரை தாக்கியதில் இருவரும் காயம் அடைந்தனர்.
அய்யாத்துரை மனைவி தங்கத்தாய் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் செல்லப்பாண்டி அவரது மனைவி இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.